அத்தனை சந்தோஷம் கொள்வாயேடி
அன்றென்னை கடந்து போகும்
ஒரு சில நொடிகள் கூட
எத்தனை சந்தோஷம் கொள்ளும்
உன்னிரு கண்களும்
என்னைக் கடந்து போகும் நொடிகளில்
கடவுளையே கண்டது போல்
சக்கரம் கட்டிக்கொண்டு நடந்தவள்தான் பார்த்திருக்கிறேன்
ஆனால் பின்னாளிலோ
இன்னொரு அடி எடுத்து வைக்கவாவென
உன் கால்கள் யோசித்ததே
என்னை கடந்துபோகும் நொடிகளில்..
சிலஅடித் தூரம் சென்றிருப்பாய்
அலைப்பேசியில் அழைப்பாய்
என்னவென்பேன் நான்
கொஞ்சம் சிரிக்க கூடாதா லூசு
என்றுச் செல்ல சண்டைப் போடுவாய்
என்னை கடக்கும் ஒரு நொடியில்
இத்தனை சந்தோஷமா என்பேன்
அருகிலிருந்து பேசமுடியவில்லையென்றாலும்
அரைநொடி பார்த்தால்கூட போதும்
அத்தனை சந்தோஷம் கொள்வேன்
உங்கள் முகம்பார்த்து என்பாய்
இப்போதும் கடந்து போகிறாய் நீ
என் கண்களை மட்டுமல்ல
என் கண்ணீரையும்...
இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது
நீ என்னை கடந்துச் சென்ற
வீதி மட்டுமல்ல
என் வாழ்க்கையும்...
No comments:
Post a Comment