Thursday, 30 April 2015

உன் மனம் கல்லாக இருந்திருந்தால்...

ஒருவேளை உன்னோடு
நான் இலலாமல் போனால்
கவலைப்படாதே என்பேன் அன்று

அப்போதெலாம் என் மனம் கல்லா
கவலைப்படாமல் இருக்க என்று
கண்ணீர் மழை பொழிவாய்

உன் மனம் கல்லாக இருந்திருந்தால்
சந்தோஷம் கொண்டிருப்பேனடி
ஆமாம்
சந்தோஷம் கொண்டிருப்பேன்

உன் மனம்
கல்லாக இருந்திருந்தால்
அதில் செதுக்கிய
என் நினைவுகளை உன்னால் அழித்திருக்க முடியாதல்லவா.?

Monday, 27 April 2015

அவளின் நினைவெனும் தொப்புள்கொடி

அவள் ஒரு மந்திரகாரி
ஆமாம்
அவள் ஒரு மந்திரகாரி

அவளை
எனது இரண்டாம் தாய் என்றேன்

அதற்காக இப்படியா..?

தாயென்றதற்காக
சிசுவாக மாற்றிவிட்டாள் என்னை.

காதல் கருவில் இப்போது நான்.

ஆம்
காதல் கருவில்
இப்போது நான்
அவளின்
நினைவெனும் தொப்புள்கொடியால்
உயிர்க்காற்றை சுவாசிக்கிறேன்...

ஓ விஞ்ஞானிகளே...

ஓ விஞ்ஞானிகளே..!
எனக்காக ஒரு செயற்க்கைகோளை உருவாக்குங்கள்
அவளின் இதயகிரகத்தை ஆராய வேண்டும்
நான் வாழ முடியுமா என்று...?

Wednesday, 22 April 2015

பச்சோந்தி தனிமை

இந்த தனிமைக்குதான் எத்தனை கொடூர குணம்

அன்று
அவள் என்னோடு இருக்கையில்
மகிழ்ச்சியிலும் புன்னகையிலும் செய்த பூக்களை
என் கரம் தந்து சென்றது

இன்று
அவள் என்னோடு இல்லதாபோது
கவலையிலும் கண்ணீரிலும்
செய்த பூக்களை
என் கரம் தந்து செல்கிறது

இப்போதுதான் புரிகிறது
இந்த பச்சோந்தி தனிமையின் கொடூர குணம்
ஆம்
என் தனிமையும் இப்போது அவளோடு சேர்ந்துகொண்டு
என் கண்ணீர் பூக்கள் பறிக்கிறது....

Monday, 20 April 2015

மழை மொழி

இப்போதெல்லாம் என் விழிகள்
எப்போதும் பேசிக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகளோடு
"மழை மொழி"களால்...

கல்நெஞ்சக் கடவுள்

அவள் மீது எந்த தவறும் இல்லை
எல்லாம் அந்த கடவுளின் தவறுதான்
ஆமாம்
எல்லாம் அந்த கடவுளின் தவறுதான்

ஏன் இப்படி செய்தான் அவன்?

அவளுக்கு கையளவும்
எனக்கு கடலளவும்
காதலை கொடுத்தது அந்த கடவளின் தவறுதான்

அவள் என்ன செய்வாள் பாவம்
கையளவு காதலை செலவழித்து முடித்துவிட்டாள் என்னில்.
கடலளவு காதலை நான் எப்படி செலவழிக்க.?

மீண்டும் சொல்கிறேன் நான்
அவள் மீது எந்த தவறும் இல்லை
காதலை சமபங்கிட தெரியாத
அந்த கடவுள் மீதுதான் தவறு...

கல்நெஞ்ச கடவுளே
என் கண்ணீர் பார்த்து கற்றுக்கொள்
பொன் பொருள் கொடுப்பதில் பேதம் காட்டு விட்டுவிடுகிறேன்
காதல் பேதம் காட்டி
கண்ணீர் சாபம் வாங்காதே

கல்நெஞ்ச கடவுளே
என் கண்ணீர் பார்த்து கற்றுக்கொள்

Saturday, 18 April 2015

நினைவுச் சிறையில்

கருணைமனு கொடுக்கவேண்டும் குடியரசு தலைவருக்கு
ஆம்
அவள் ஆயுள்கைதியாக்கி விட்டாள்
எனை அவள்
"நினைவுச் சிறையில்"...

Thursday, 16 April 2015

உலகின் சிறந்த மாணவி

உலகின் சிறந்த மாணவி நீதான்
ஆம்
ஒரு நாள்கூட விடுப்பு எடுக்கவில்லை
என் கனவெனும் பள்ளியில்...

கிணற்றுத்தவளை

நானும் உலகமறியாத கிணற்றுத்தவளைதான்
ஆம்
அவளின் நினைவெனும் கிணற்றில்

தவறவிட்டதோ..?

தமிழ் அகராதி தவறவிட்டதோ.?
தேடினேன்
கவிதை என்னும் சொல்லுக்கு பின்னால்
அவள் பெயரை...

Wednesday, 15 April 2015

கானல் நீராக

காதல் தாகம்
தவித்துகொண்டிருக்கிறேன்
இதயம் வறன்டு
அன்பு மழை பொழிந்தவள்
அதோ
கானல் நீராக...

கலையாத மேகமாய்

மேகம் அழுது கலைந்ததும் தெளிவாகிவிடுகிறது வானம்
நானும்
அழுகிறேன்
அழுகிறேன்
அழுதுகொண்டேதான் இருக்கிறேன்
கலையாத மேகமாய்
உன் நினைவுகள்
என் நெஞ்சில் இருப்பதால்...

Tuesday, 14 April 2015

என் மனதை எரித்துக் குளிர்காய்கிறது

உன் நினைவுகள் குளிர்ச்சியானதுதான்
ஆமாம்
உன் நினைவுகள் குளிர்ச்சியானதுதான்
ஆம்..
அதனால்தான்
அது
தினமும்
என் மனதை
எரித்துக் குளிர்காய்கிறது

Sunday, 12 April 2015

உன் நினைவுகள் இல்லையென்றால்

கடல் இல்லையென்றால்
அலைகள் இல்லை

கண் இல்லையென்றால்
பார்வை இல்லை

சிற்பி இல்லையென்றால்
சிலைகள் இல்லை

சிந்தனை இல்லையென்றால்
தெளிவு இல்லை

அன்னை இல்லையென்றால்
பிறப்பு இல்லை

அன்பு இல்லையென்றால்
மகிழ்ச்சி இல்லை

நீர் இல்லையென்றால்
உயிர்கள் இல்லை

நீ இல்லையென்றால்
நான் இல்லை

உன் நினைவுகள் இல்லையென்றால்
என் உயிர் இல்லை...

வறுமை

கிளைகளுக்கு வறுமை
இலையுதிர் காலம்

நிலவுக்கு வறுமை
அமாவாசைக் காலம்

வருடத்திற்கு வறுமை
பிப்ரவரிக் காலம்

வணிகத்திற்கு வறுமை
பணமில்லா காலம்

என் கவிதைகளுக்கு வறுமை
உன் நினைவுகளை மறந்த காலம்

மறப்பது கடினம்
மாற்றிக்கொள்கிறேன் வரிகளை

என் கவிதைகளுக்கு வறுமை
நான் இறந்த காலம்

ஒற்றுமை

நானும் நிலவும்
தேய்வதில்

நானும் மேகமும்
கண்ணீர்விடுவதில்

நானும் கடலும்
உறங்காதிருப்பதில்

நானும் இதயமும்
துடிப்பதில்

நானும் நீயும்
பிரிந்தே இருப்பதில்

நானும் உன் நினைவுகளும்
சேர்ந்தே இருப்பதில்

Saturday, 11 April 2015

எப்படி மறக்கவேண்டும் என்றுரைத்துப் போ

நான்கு பத்து மாதங்கள்
நான் உங்கள் உயிர்
நீங்கள் என் உயிர்
என்று உயிர்மொழியால் உருகியவள்

இப்போது
என்மேல் பாசமிருந்தாள்
மூன்று வேளை சாப்பிடுங்கள்
எதற்கும் கவலைப்படாதீர்கள்
கவணமாக இருங்கள்
என்னை மறந்துவிடுங்கள்
என்றுரைக்கிறாள்

எல்லாம் உரைத்துச் சென்றவளே
ஒன்றை மறந்துவிட்டாயடி
ஆம் ஒன்றை மறந்துவிட்டாய் நீ

வா..
வந்து உரைத்துச்செல் எனக்கு
உன்னை
எப்படி மறக்கவேண்டும் என்று...

Friday, 10 April 2015

எப்படி மறந்தாய்?

எப்படி மறந்தாய்?
உன்னில் நானும்
என்னில் நீயும்
இருந்த நாட்களை.. 

எப்படி மறந்தாய்?
உனக்காக என் கண்களும்
எனக்காக உன் கண்களும்
அழுத கண்ணீர் துளிகளை

எப்படி மறந்தாய்?
உனக்காக என் இதயமும்
எனக்காக உன் இதயமும்
துடித்திட்ட நொடிகளை 

எப்படி மறந்தாய்?
உனக்காக நானும்
எனக்காக நீயும்
வணங்கிய தெய்வங்களை

எப்படி மறந்தாய்?
உனக்காக நானும்
எனக்காக நீயும்
மாற்றிக்கொண்ட குணங்களை

எப்படி மறந்தாய்?
உன் கனவனாக நானும்
என் மனைவியாக நீயும்
வாழ்ந்திட்ட வருடங்களை

எப்படி மறந்தாய்?
உன் மணிக்கட்டில் நானும்
என் கன்னத்தில் நீயும்
இதழ்பதித்த முதல் முத்தங்களை

எப்படி மறந்தாய்?
நீ இல்லாத நொடிகளெல்லாம்
உன் நினைவால்
செத்துக்கொண்டிருப்பேன்
என தெரிந்தும்
எப்படி மறந்தாயடி என்னை
எப்படி மறந்தாய்.?.?.?

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை

எதேச்சையாக விட்டுச்சென்றாளா
இல்லை
எனக்காகதான் விட்டுச்சென்றாளா?

மடிப்பு கலையாமல்
மனதோடு வைத்து பார்த்திருக்கிறேன்
அவள் விட்டுச்சென்ற வெள்ளைநிறக் கைக்குட்டையை

அழுகிறேன் இப்போது
அவள் கரமில்லை என் கண்துடைக்க

அவள் விட்டுச்சென்ற கைக்குட்டை
அவள் கரமாக கண்களில் தெரிந்தாலும்
கண்ணீர் துடைக்கமால்
கண்ணீரோடு பார்த்துக்கொண்டிருக்கிறேன்

கண்ணீர் துடைத்தால்
அதில் கலந்திருக்கும்
அவள் கைரேகை கலைந்துவிடும் என்பதால்..

கத்திக்கப்பலாக...

அன்பெனும் கடலாக கொடுத்தேன்
என் இதயத்தை அவளிடம்

பயணிக்கிறாள் இப்போது

கத்திக்கப்பலாக...

கொட்டிக்கிடக்கும் நினைவுகள்

உலகின் மிகப்பெரிய சேமிப்புக்கிடங்கு
என் இதயம்தான்.
ஆம்..
எத்தனை டன் என்று
எனக்கே தெரியவில்லை
அளவிட முடியாமல்
கொட்டிக்கிடக்கும்
அவளின் நினைவுகள்...



Thursday, 9 April 2015

அவள் குலதெய்வத்திற்கு பலியிட்டாள் என்னை..

அவள் குலதெய்வ கோவிலுக்கு கொடைவிழா
எத்தனையோ ஆண்டுகள் கழித்து
இப்போதுதான் நடக்கிறதாம்
அதனால்தான் அத்தனை சந்சோஷம் கொண்டிருந்தாள்
ஐந்தாறு மாதம் முன்பே

வரிகொடுக்க வேண்டும்
புதுத்துணி வாங்க வேண்டும்
கிடா பிடிக்க வேண்டும்
எத்தனை சந்தோஷம் அவளுக்கு

நேர்த்திக்கடன் நிறைவேற்ற ஆட்டுக்கிடா வேண்டும்
உங்கள் வீட்டில் இருக்கிறதா.?

ம்ம்.. இருக்கிறது
விலை பத்தாயிரம் என்றேன்

என்ன விலையென்றாலும் பரவாயில்லை
எனக்கு வேண்டும்
யாரிடமும் கொடுக்கவேண்டாம்
நான் வாங்கிகொள்கிறேன் என்றாள்

அதெப்படி கொடுப்பேன்?
நேற்றுதானே குட்டிபோட்டுள்ளது என்றேன்

நேற்று போட்ட குட்டிக்கா பத்தாயிரம் உங்களுக்கு? என்று என்மேல் எத்தனை சண்டைப்பிடித்தாள் பொய்க்கோபமாக

இதோ
கொடைவிழாவும் வந்துவிட்டது

ஆட்டுக்கிடா பிடித்தார்களா நேர்த்திக்கடன் செய்ய?
என அறியவில்லை நான்

கொடை முடிந்த பின்புதான் நானறிந்தேன்
அந்த கொடைவிழாவில்
அவள் குலதெய்வத்திற்கு பலியிட்டுருந்தாள்
என்னையும்
என் காதலையும்...

எல்லா தெய்வத்திடமும் என்னைச்சேர
ஏதேதோ நேர்ந்துகிட்ட நீ
எப்போதடி நேர்ந்தாய்?
உன் குலதெய்வத்திடம் மட்டும்
என்னையும்
என் காதலையும்
பலியிடுவேன் என்று...

Wednesday, 8 April 2015

வெறிச்சோடிக் கிடக்கிறது

அத்தனை சந்தோஷம் கொள்வாயேடி

அன்றென்னை கடந்து போகும்

ஒரு சில நொடிகள் கூட


எத்தனை சந்தோஷம் கொள்ளும்

உன்னிரு கண்களும்

என்னைக் கடந்து போகும் நொடிகளில்

கடவுளையே கண்டது போல்


சக்கரம் கட்டிக்கொண்டு நடந்தவள்தான் பார்த்திருக்கிறேன்

ஆனால் பின்னாளிலோ

இன்னொரு அடி எடுத்து வைக்கவாவென

உன் கால்கள் யோசித்ததே

என்னை கடந்துபோகும் நொடிகளில்..


சிலஅடித் தூரம் சென்றிருப்பாய்

அலைப்பேசியில் அழைப்பாய்

என்னவென்பேன் நான் 

கொஞ்சம் சிரிக்க கூடாதா லூசு

என்றுச் செல்ல சண்டைப் போடுவாய்


என்னை கடக்கும் ஒரு நொடியில்

இத்தனை சந்தோஷமா என்பேன்

அருகிலிருந்து பேசமுடியவில்லையென்றாலும்

அரைநொடி பார்த்தால்கூட போதும்

அத்தனை சந்தோஷம் கொள்வேன்

உங்கள் முகம்பார்த்து என்பாய்


இப்போதும் கடந்து போகிறாய் நீ

என் கண்களை மட்டுமல்ல

என் கண்ணீரையும்...


இப்போது வெறிச்சோடிக் கிடக்கிறது

நீ என்னை கடந்துச் சென்ற

வீதி மட்டுமல்ல

என் வாழ்க்கையும்...

கண்ணீர் ஊற்றெடுக்கும் சுனை

என் வாழ்நாள் முழுவதும் என்கூடவே இருப்பலடா.?
நான் உங்களை விட்டு எஙகே போக போறேன் லூசு...

என் கண்கள் கலங்கும் வேளைகளில்
ஆம்பளை அழலாமா லூசு...

நான் இல்லாம போயிட்டா நீ கவலை பட கூடாதுடா
என் மனசு மட்டும் கல்லா..?

அன்பால் அவள் அன்றுரைத்த இந்த பதில்கள்தான்
இன்று என் கண்ணீர் ஊற்றெடுக்கும் சுனையாகிறது...

Tuesday, 7 April 2015

நான் ஒரு பிணம்

நான் ஒரு பிணம்
ஆமாம்
நான் ஒரு பிணம்
வேறு என்ன சொல்ல.?
அவள் இல்லாத என்னை

என் இதயமெனும் கருவறை

எப்போதும் சுமந்து கொண்டிருக்கிறது
என் இதயெனும் கருவறை
உன் நினைவுகளை

அது
எப்போதாவது கவிதைகளையும்
எப்போதும் கண்ணீரையும் பிரசவிக்கிறது

எப்போது பிரசவிக்கும்
என் மரணத்தை..?

ஞாபகமறதி

ஓ பிரம்மா...
உனக்கும் ஞாபகமறதியா?
அவளுக்கு இதயம் படைக்க மறந்துவிட்டாயே...

களவுபோன கவிதை

உலகின் சிறந்த கவிதையை எழுதினேன்
அவள் நினைவுகளை தொகுத்து
களவு போயிருந்தது கவிதை
நான் கண்ணிமைத்த கணநேரத்தில்
களவாடியது வேறு யாருமல்ல
என் கண்ணீர் துளிகள்தான்...

Monday, 6 April 2015

மலர் என்றேன் அவளை

மலர் என்றேன் அவளை
ஆம்
அவள்
அன்பெனும் தேன் காட்டி
என்னை விழுங்கிய
"நெப்பந்திஸ் மலர்"...

எனது இறந்த நாள்

உலகில் யாருக்கும் தெரியாது
தனது இறநத நாள் எதுவென்று
ஆனால் எனக்கு தெரியும்
எனது இறந்த நாள்
"அவள் என்னை மறந்து விடுங்கள் என்று சொல்லிய நாள்"
ஆம்
அன்றுதான் நான் இறந்தேன்...

Saturday, 4 April 2015

தோற்றுப்போகும் கவிதைகள்

ஆயிரம் கவிதைகள்
அனுதினம் தோன்றினாலும்
தோற்றுதான் போகிறது
உன் பெயரெனும்
ஒருவரிக் கவிதையிடம்...


ஸ்லோ பாய்ஸன்

உன் நினைவுகள்
இப்போதுதான் அர்த்தம் புரிகிறது
"ஸ்லோ பாய்ஸன்" என்ற ஆங்கிலச்சொல்லுக்கு...

என்னோடு மௌனம் ஏன்?

என்னோடு மௌனம் ஏன் என்னுயிர் தோழியே
ஊமைக்கும் மொழிகளுண்டு உனக்கொரு மொழியும் கிடையாதா?

மௌனமே உன் மொழியானால்
மரணம்தான் என் வ(லி)ழியாகும்

உன் மௌனத்தில் விஷம் வைத்து
என் மனதினை கொல்வதும் ஏனோ?

மௌனத்தின் தாழ்திறந்து உன் மனதினுள் அழைப்பாயா?
இல்லை மரணத்தின் வ(லி)ழிதந்து மன்னினுள் புதைப்பாயா?

உன் மௌனம் தரும் வலிகளெல்லாம் என் மனதோடு சேர்த்துவைப்பேன்
மரணமெனும் மருந்திட்டு ஒருநாள் வலியாற்றி உறங்கிடுவேன்

உன் மௌனம் உடையும் நேரம்
நான் மரண பயணம் சென்றிருப்பேன்

நீ பேச நினைக்கும் அந்நேரம்
உன் இதழ்கள் மொழிகள் உதிர்க்காது
உன் விழிகள் துளிகள் உதிர்த்திடுமே

மறந்துபோய்விட்டது

மறந்துபோய்விட்டது
என் மனம் போட்ட பாஸ்வேர்டு
எப்படி அழிப்பது..?
என் இதய மெமரியில் பதிவாகியுள்ள
உன் நினைவுகளை...

Friday, 3 April 2015

கல்லரைத் தூக்கம் தந்துவிடு

ராவண தம்பியே
ராத்தூக்கம் எனக்கில்லை
என்ன மாத்திரை நீ எடுத்தாய்
எப்போதும் நீ தூங்க
நினைவெனும் மாத்திரை தந்து
என் நித்திரை பறித்து ஓடிவிட்டாள்
கண் தூக்கம் எனக்கில்லை
அந்த கடவுளுக்கும் கண்ணில்லை
இரண்டுபட்ட இதயத்திற்கு துடிப்பெதற்கு
இமைக்காத கண்களுக்கு இமைகளெதற்கு
கடவுளே கடவுளே உன் கால்பிடித்து கெஞ்சுகிறேன்
உறங்கா தவம்புரிந்து வரமொன்று கேட்கின்றேன்
கண்தூக்கம் கூட தரவேண்டாம்
எனக்கு நீ
கல்லரைத் தூக்கம் தந்துவிடு...

Thursday, 2 April 2015

வெறுமையாகிவிட்டேன்

என்னில் இருந்த எல்லாவற்றையும்
செலவழித்து வெறுமையாகிவிட்டேன் நான்.
என்னில் இருக்கும்
உன் நினைவுகளையும்
என் கண்ணீரையும் தவிர...

என் இதயம்தான் கல்

உன் இதயம்தான்
கல் என்று நினைத்திருந்தேன்
இதுவரை
இல்லை.. இல்லை..
என் இதயம்தான் கல் என்று உணர்ந்துகொண்டேன் இப்போது
ஆம்
என் இதயத்தில் வேர்விட்டிருக்கும்
உன் நினைவுச் செடிகளை
பிடுங்க முடியாதபோது...

Wednesday, 1 April 2015

வரமா? சாபமா?

வரமா சாபமா உன் நினைவுகள்?
சாபம்தானடி உன் நினைவுகள்
ஆம்
உன் நினைவுகள்
என் கண்ணீர் பார்த்து கைத்தட்டுகிறது
இதயம் கிள்ளி வலி பார்க்கிறது
உறக்கம் பறித்து ஒழித்து வைக்கிறது
துயர் கொடுத்து தூளி ஆடுகிறது

இல்லை.. இல்லை..
வரங்கள்தான் உன் நினைவுகள்

ஆம் எத்தனை துயர்க்கொடுத்தாலும் உன் நினைவுகள் உன்னைப்போல் இல்லையடி என்னை பாதியில் விட்டுச்செல்ல
என் மரணம் வரை என்னைப் பிரியாமல்
என் கண்ணீரை காதலிக்கும்
உன் நினைவுகள் ஒவ்வொன்றும் வரம்தான்...