Thursday, 9 April 2015

அவள் குலதெய்வத்திற்கு பலியிட்டாள் என்னை..

அவள் குலதெய்வ கோவிலுக்கு கொடைவிழா
எத்தனையோ ஆண்டுகள் கழித்து
இப்போதுதான் நடக்கிறதாம்
அதனால்தான் அத்தனை சந்சோஷம் கொண்டிருந்தாள்
ஐந்தாறு மாதம் முன்பே

வரிகொடுக்க வேண்டும்
புதுத்துணி வாங்க வேண்டும்
கிடா பிடிக்க வேண்டும்
எத்தனை சந்தோஷம் அவளுக்கு

நேர்த்திக்கடன் நிறைவேற்ற ஆட்டுக்கிடா வேண்டும்
உங்கள் வீட்டில் இருக்கிறதா.?

ம்ம்.. இருக்கிறது
விலை பத்தாயிரம் என்றேன்

என்ன விலையென்றாலும் பரவாயில்லை
எனக்கு வேண்டும்
யாரிடமும் கொடுக்கவேண்டாம்
நான் வாங்கிகொள்கிறேன் என்றாள்

அதெப்படி கொடுப்பேன்?
நேற்றுதானே குட்டிபோட்டுள்ளது என்றேன்

நேற்று போட்ட குட்டிக்கா பத்தாயிரம் உங்களுக்கு? என்று என்மேல் எத்தனை சண்டைப்பிடித்தாள் பொய்க்கோபமாக

இதோ
கொடைவிழாவும் வந்துவிட்டது

ஆட்டுக்கிடா பிடித்தார்களா நேர்த்திக்கடன் செய்ய?
என அறியவில்லை நான்

கொடை முடிந்த பின்புதான் நானறிந்தேன்
அந்த கொடைவிழாவில்
அவள் குலதெய்வத்திற்கு பலியிட்டுருந்தாள்
என்னையும்
என் காதலையும்...

எல்லா தெய்வத்திடமும் என்னைச்சேர
ஏதேதோ நேர்ந்துகிட்ட நீ
எப்போதடி நேர்ந்தாய்?
உன் குலதெய்வத்திடம் மட்டும்
என்னையும்
என் காதலையும்
பலியிடுவேன் என்று...

No comments:

Post a Comment