Sunday, 22 March 2015

கன்றை இழந்த பசுவாய் உன்னை இழந்த நான்..

ஏனோ தெரியவில்லை
இறந்துவிட்டது எங்கள் வீட்டுப் பசுவின் இளங்கன்று

தாய்ப்பசு தவித்தது
கதறியது கயிறருக்க துடித்தது
ஐந்தறிவு ஜீவன் அதுவும் கண்ணீர் விட்டது

என்ன செய்வது?

இறந்த கன்றின் தோலெடுத்து வைக்கோலை வயிற்றுனுள் புகுத்தி கன்றுருவம் கொடுத்து தாய்ப்பசுவின் கண்முன் நிறுத்தினோம் அப்போலிக்கன்றை..

கதறல் குறைந்தது கண்ணீர் குறைந்தது இப்போது பசுவிற்கு

தனபிள்ளை இறக்கவில்லை  என்றென்னி போலிக்கன்றின் முகம்தனை நாவால் நக்கி அன்பைக் கொட்டியது அமைதிகொண்டது.

அத்தாய்ப்பசு போல் நானும் இன்று..

ஆம்
என்னில் விட்டுப்போன அவளின் நினைவுகளையெல்லாம் ஒன்றாகப் புனைந்து அவளுருவம் கொடுத்து அருகில் அமரவைத்து
காதல் பேசிக் கொண்டிருப்பேன் கண்ணீரோடு
என் கண்மூடும் வரை...

No comments:

Post a Comment