உலகிலேயே மிகவும்
வன்முறையான தாவரம்
உன் நினைவுகள்தான்
ஆம் அது வேர்விட்டிருப்பதென்னவோ
என் இதயத்தில்தான்
ஆனால் அது அனுதினம்
என் விழிநீரை உரிஞ்சல்லவா உயிர்வாழ்கிறது...
Tuesday, 31 March 2015
வன்முறையான தாவரம்
கல்வீசிப் போகிறாய்
கண்ணாடி நெஞ்சமென தெரிர்ந்தும் கல்வீசிப் போகிறாய் நீ
கல்வீசினாலும் கலங்க மாட்டேன்
ஆம்
உடையாத நெஞ்சில் ஒருமுகமாய் உன்னை பார்த்திருந்தேன்
இனி உடைந்த ஒவ்வோர் துண்டிலும்
உன்முகம் பார்ப்பேன்
Monday, 30 March 2015
உன் அன்பைக் கேட்டு
வானவில் வளைந்து கெஞ்சுகிறது
உன் வண்ணம் கேட்டு
வெண்ணிலா தேய்ந்து செல்கிறது
உன் முகசாயல் கேட்டு
மலர்கள் வாடி உதிர்கின்றது
உன்போல் மணம் கேட்டு
மேகம் அழுது பொழிகின்றது
உன் குழலாய் மாற கேட்டு
விண்மீன்கள் உருகி வீழ்கின்றது
உன் விழிபோல் ஒளி கேட்டு
இவற்றையெல்லாம் போல் நானும்
கெஞ்சியும்
தேய்ந்தும்
வாடியும்
அழுதும்
உருகியும் கேட்கிறேன்
உன் அன்பை...
எனக்கு எல்லாம் நீதான்
என் இதயத்தில் துடிப்பாக நீ
என் இரவுகளில் கனவாக நீ
என் விழிகளில் காட்சியாக நீ
என் விடியலில் வெளிச்சமாக நீ
என் சுவாசத்தில் காற்றாக நீ
என் நேசத்தில் அன்பாக நீ
என் பயணத்தில் வழிகளாக நீ
என் பக்கத்தில் நட்பாக நீ
ஆம்
எனக்கு எல்லாமும் நீதான்
ஆனால் உனக்கு மட்டும் நான்..?
ஓர் எழுத்துக்கூட கவிதையாகும்
தமிழில் ஓர் எழுத்துக்கூட
கவிதையாகும் என்பதை
அப்போதுதான் தெரிந்துகொண்டேன்
ஆம்
அவள் "ம்" என்று சொன்னபோது..
என் கவிதைகளின் தாய்
என் கவிதை வரிகளின் தாய்
அவளின் நினைவுகள்
ஆம்
அவளை நினைக்கும் போதுதான்
என் கவிதைகள் பிறக்கின்றன...
சேர்ந்து வாழ்கிறோம் இருவரும்
அவள் என்னை விரும்பாதபோதும்
சேர்ந்து வாழ்கிறோம் இருவரும்
ஆம்
சேர்ந்து வாழ்கிறோம் இருவரும்
நானும் அவள் நினைவுகளும்
அது ஒரு மழை இரவு
அது ஒரு மழை இரவு
ஜன்னல் வழி வரும் சாரலின் குளிர் குத்தூசியாய் உடல் குத்திச்சென்றது
கைப்பேசியில் காதல் மொழி பேசிக்கொண்டிருந்தாள் என்னவள்
ஜன்னலை பூட்டிக்கொள்ளுங்கள்
போர்வையால் போர்த்திக்கொள்ளுங்கள்
அவளின் அக்கறைப்பேச்சு இது.
ம்ம்.. ஆனாலும் குளிர்கிறதே - இது நான்
அப்படியென்றால் அனைத்துக்கொள்ளுங்கள் என்னை-இது அவள்
மழைக்கு குளிரெடுத்தது இப்போது
எத்தனை காதலடி என்மேல் அன்றுனக்கு..
இப்போதும் மழை பொழிகிறது
என் இரவுகளில்
ஆனால்
ஏனோ குளிரவில்லை இன்றெனக்கு கண்ணீர் மழை....
Sunday, 29 March 2015
அப்படியென்ன எழுதிவிட்டேன்?
கவிஞர்களெல்லாம் கலங்கிதான் போனார்கள்
அப்படியென்ன எழுதிவிட்டேன் நான்?
வைரமுத்து விக்கித்து போனான்
முத்துகுமார் மூச்சடைத்து போனான்
கார்க்கி காணாமல் போனான்
விவேகா வியர்த்து போனான்
பழனிபாரதி பரிதவித்து போனான்
யுகபாரதி எங்கோ போனான்
இன்னும் எல்லா கவிஞர்களும் போட்டியாகதான் நினைக்கிறார்கள் என்னை
ஒற்றை வரியில்
கவிதை எனும் தலைப்பில்
அவள் பெயரை எழுதியதால்...
Saturday, 28 March 2015
ஓரவஞ்சனை
ஓ பிரம்மா...
உனக்கேன் இந்த ஓரவஞ்சனை?
ஐந்தறிவு ஆக்டோபஸுக்கு
மூன்று இதயம் படைத்த நீ
அவளுக்கு ஒன்றாவது....
Friday, 27 March 2015
அவள் கண்களில்
கவிஞராக வேண்டுமென்றால் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டுமாமே
நான் படித்துவிட்டேன்
உலகில் எழுதப்பட்ட
எல்லா புத்தகங்களையும்
இன்னும் எழுதப்படபோகிற புத்தகங்களையும்
ஆம்
அவள் கண்களில்...
Thursday, 26 March 2015
கனவில் மட்டும்
ஒரு நாளாவது
உங்கள் மனைவியாக வாழ்ந்துவிட்டுதான் இவ்வுலகை விட்டுப்போவேன் என்றாய் அன்று..
ஒரு நாள் என்னடி ஒரு நாள்
என் உயிருள்ள வரை
என் மனைவியாகதான் வாழ்வாய்
என் கனவில் மட்டும்
Wednesday, 25 March 2015
Tuesday, 24 March 2015
மாற்றம்
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாத தத்துவமாம்
யார் சொன்னது இவ்வாறென்று எத்தனைமுறை கோபப்பட்டிருப்பேன்
என்னை நினைக்கும்
அவள் மனதிற்கு
இது விதிவிலக்கென்று..
கோபப்பட்டது தவறுதான்
ஒத்துக்கொள்கிறேன் இப்போது
ஆம்
மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாத தத்துவம்
Monday, 23 March 2015
கவிதைகள்
கவிதை
இது எப்போது வருமென்று தெரியாத
என் எழுதாத பக்கங்களின் விருந்தாளிகள்..
கவிதை
இது அவள் வரும் கனவுகளின் மொழிபெயர்ப்புகள்..
கவிதை
இது அவள் என்னில் விட்டுச்சென்ற நினைவுகளின் நிஜங்கள்..
கவிதை
இது அவள் என்னில் விதைத்துச்சென்ற காதல் விதைகளின்
கண்ணீர் அறுவடை..
கவிதை
இது அவள் நினைவால்
என் பேனா விடும் கண்ணீர்..
Sunday, 22 March 2015
கன்றை இழந்த பசுவாய் உன்னை இழந்த நான்..
ஏனோ தெரியவில்லை
இறந்துவிட்டது எங்கள் வீட்டுப் பசுவின் இளங்கன்று
தாய்ப்பசு தவித்தது
கதறியது கயிறருக்க துடித்தது
ஐந்தறிவு ஜீவன் அதுவும் கண்ணீர் விட்டது
என்ன செய்வது?
இறந்த கன்றின் தோலெடுத்து வைக்கோலை வயிற்றுனுள் புகுத்தி கன்றுருவம் கொடுத்து தாய்ப்பசுவின் கண்முன் நிறுத்தினோம் அப்போலிக்கன்றை..
கதறல் குறைந்தது கண்ணீர் குறைந்தது இப்போது பசுவிற்கு
தனபிள்ளை இறக்கவில்லை என்றென்னி போலிக்கன்றின் முகம்தனை நாவால் நக்கி அன்பைக் கொட்டியது அமைதிகொண்டது.
அத்தாய்ப்பசு போல் நானும் இன்று..
ஆம்
என்னில் விட்டுப்போன அவளின் நினைவுகளையெல்லாம் ஒன்றாகப் புனைந்து அவளுருவம் கொடுத்து அருகில் அமரவைத்து
காதல் பேசிக் கொண்டிருப்பேன் கண்ணீரோடு
என் கண்மூடும் வரை...
Saturday, 21 March 2015
தொட்டில் குழந்தை
அன்று
அவள் என்னை அவளின் குழந்தை என்றாள்
நான் அவளை எனது தாய் என்றேன்..
இன்று
நான் "தொட்டில் குழந்தை"யாய்...
(தொட்டில் குழந்தை திட்டம் தமிழ்நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக செயல்படுவதாகும்)
Friday, 20 March 2015
தோற்றுப்போகிறது சிரபுஞ்சி...
நிரந்தரமாக நிலைகொண்டுள்ளது
உன் நினைவெனும் புயல்ச்சின்னம்
என் நெஞ்சில்
அதனால்தான்
தோற்றுப்போகிறது சிரபுஞ்சி
என் விழிகளோடு போட்டியிட்டு...
Thursday, 19 March 2015
கந்துவட்டிக் கும்பல்
உன் நினைவுகளும்
ஒரு வகையில்
கந்துவட்டிக் கும்பல்தான்
ஆம்
அதனால்தானடி
இரக்கமின்றி பறித்துக்கொள்கிறது என் இரவுகளை...
என்றும் பசுமையாய்...
என்றும் பசுமையாய்
வளர்ந்துக் கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் எனும் பயிர்
என் நெஞ்சில்
ஆம்...
அதற்கு தினமும்
என் விழிகள் அல்லவா
மழை பொழிகின்றது...
Wednesday, 18 March 2015
அப்படியென்ன தீராத பகை?
அப்படியென்ன தீராத பகை
என் உறக்கத்திற்கும்
உன் நினைவுகளுக்குமிடையே
நாள்தோறும்
உன் நினைவுகளோடு
சண்டையிட்டு
உயிர்விடுகிறது என் உறக்கம்...
Monday, 16 March 2015
விடியாத இரவாய்...
இப்பொதெல்லாம்
விடியாத இரவாய் உறங்கி கிடக்கிறது
என் கைப்பேசியின் திரை
ஆம்
எப்போதும் வெளிச்ச விடியல் கொடுக்கும்
உன் குறுந்தகவல் இல்லாததால்...
Saturday, 14 March 2015
Friday, 13 March 2015
வெப்ப நீர்வீழ்ச்சி
என்னவளே.. ஞாபகமிருக்கிறதா?
மேல்நிலை இரண்டாமாண்டு
கல்வி, அருவி என்ற தலைப்புகளில் கவிதை கேட்டாய் நீ
கல்வி என்ற தலைப்பிற்கு கண்ணைமூடி எழுதிவிட்டேன் கவிதையை..
அருவி என்ற தலைப்பிற்கோ வரிகள் வசப்படவில்லை
அன்று நான் எழுதாமல் விட்ட வரிகள்
அருவி
உன்னால் பின்னாளில்
என் விழிகள் பொழியும்
வெப்ப நீர்வீழ்ச்சி...
Thursday, 12 March 2015
பிறந்தநாள் வாழ்த்து
இன்று ஹோலிப்பண்டிகை...
அவள் வாழ்க்கையை வண்ணங்களாகவும்
என் வாழ்க்கையை கருப்பாகவும் மாற்றிச் சென்ற
என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
(அவளின் நினைவால் 06.03.2015ல் எழுதியது)
உறங்கிப்போய்விட்டது...
உறக்கம்..
ஆம் அது உறங்கிதான் போய்விட்டது
உன் நினைவுகளால்...