என் மனைவியாக நீயும் வந்தால்
எப்போதும் நான் கேட்பேன்
இடைவிடாது நான் கேட்பேன்
முப்பொழும் நான் கேட்பேன்
மூச்சுள்ளவரை நான் கேட்பேன்
வரதட்சனைக் கேட்டு கேட்டு
நச்சரிப்பேன் நான் தினமும்
என்று நான் சொல்லியதற்கா
பிரிந்து சென்றாய் பேதை நீயும்
அன்பெனும் வரதட்சனை உன்னிடம் இல்லையா
அதை நீதான் தர மறுக்க
அத்தனை ஏழையா?
தெரியாமல் சொல்லிவிட்டேன்
இனி தினமும் நான் கேட்கமாடேன்
உலகம் விட்டு செல்லும்முன்
ஒருமுறையேனும் வந்துவிடு
உன் அன்பில் கொஞ்சம் தந்துவிடு
No comments:
Post a Comment