படைத்தல் பிரம்மனாம்
காத்தல் விஷ்ணுவாம்
அழித்தல் ஈசனாம்
இதுதான் இவர்களுக்கு தொழிலாம்
ஏனோ படைத்துவிட்டான் எனைதான் பிரம்மனும்
இதுவரை காத்துவிட்டான் இரக்கமுள்ள விஷ்ணுவும்
இனியென்ன?
ஈசனின் அழித்தல்
அவன்தொழில் என்னில்
இதோ
ஈசன் அவனும் எழுதப் போகிறான்
என் மரணமெனும் கவிதையை மண்ணில்
என் இதயம் முழுவதும் வலியிட்டு
அவளின் காதெலனும்
பிள்ளையார் சுழியிட்டு...
ஈசனே என்ன இது?
அழிப்பது உன் தொழில்தான்
அறிவேனே நானும்தான்
உன்தொழிலை மதிக்கிறேன்
உடன்படவும் செய்கிறேன்
எந்த ஆயுதத்தால்
எனையழிக்க போகிறாயோ என்றென்னி காத்திருந்தேன்
நீ கொண்டு வந்த ஆயுதம் கண்டு குலைநடுங்கி போனேனடா
அழிக்கும் ஆயுதங்களை அப்படியெங்கே தொலைத்தாய் நீ
அவளின் நினைவெனும் ஆயுதத்தால் எனை அழிக்க நினைக்கிறாயே
முக்கண் திறந்து சாம்பலாக்கு காற்றில் கலந்து விடுகிறேன்
ஆழியின் ஆழத்தில் அமிழ்த்திவிடு அங்கேயே மூழ்கிப்போகிறேன்
இல்லையேல்
என் கழுத்துப் பிடித்தேனும் கைநெறி
கண்மூடி என் காலம் முடிக்கிறேன்
அழிக்கும் ஆயுதங்களை அப்படியெங்கே தொலைத்தாய் நீ
அவளின் நினைவெனும் ஆயுதத்தால் எனை அழிக்க நினைக்கிறாயே...
No comments:
Post a Comment