Friday, 8 May 2015

அவளின் காதல்

பாதி வழியில்
பாதை மறந்த
புனித யாத்திரை

என் உயிர்மரம் பட்டுப்போக
அன்பெனும் கோப்பையால்
அவள் ஊற்றிய அமிலம்

ஹம்பர்க்கின் தலைநகரில் அச்சிடப்பட்ட
நாள்தோறும் நான் படித்த
காதல் நாளிதழ்

கின்னஸில் இடம்பெறலாம்
இது நான்காண்டு நான் கண்ட
மிக நீளக் கனவு

முப்போகம் விளையும்
என் கண்ணீர் வயலுக்கு
அவள் வித்திட்ட விதை

என் மரணமெனும் கவிதைக்கு
அன்போடு அவள் போட்ட
பிள்ளையார் சுழி

எப்போதும் என் விழிகலங்க
தூசியள்ளி வீசிச்சென்ற
காதல் புயல்

நீந்த தெரியாத
என் கடல் பயணத்திற்கு
கனிவோடு அவள் தந்த
துடுப்பில்லா படகு

வறன்ட தேசத்தில்
வரமறுக்கும் மழை
வளமான தேசத்தில்
வந்தழிக்கும் மழை

தவமிருந்து வரம்பெற
கடவுள் வரும் நேரத்தில்
இமைதிறந்த என் விழியின்
ஓளிபறித்த மின்னல்

அவள் நினைவால்
அனுதினம் நான் சாக
அவளாக தந்துச்சென்ற
வரம் வரம் வரம்...

No comments:

Post a Comment