அவள் நினைவுகளில்
வரிகள் வாங்கி
நித்தமும் எழுதி சாகும்
என் விழிகளின் கவிதை
தாகம் கொண்ட
என் தலையனைக்கு
இரவில் பொழியும்
என் விழிகளின் மழை
என் சொந்தங்களின்
மரிவுக்கு வரமறுத்த
அவள் பிரிவுக்கு வந்திருக்கும்
என் விழிகளின் தோழன்
யாருமற்ற நேரத்திலே
இடைவிடாது கதைப்பேச
எங்கிருந்தும் வந்திறங்கும்
என் விழிகளின் விருந்தாளி
அவளின் நினைவெனும் சொத்துக்களை
ஆயுள்வரை செலவழிக்க
இதயம் கொடுத்தனுப்பும்
என் விழிகளின் சில்லரைகள்
கடிணமான மொழி இதுதான் என்று
கற்கவில்லை நானும் இதை
அவள் பிரிவெனும் பாடத்தில்
நொடியினில் கற்றுக்கொண்ட
என் விழிகளின் மொழி
No comments:
Post a Comment