எத்தனை மைல் தூரமென்றாலும்
இடுப்பேற்றி எனை சுமந்த -என்
பெரியாத்தா இறந்ததற்கே பெருங்கண்ணீர் கொள்ளவில்லை
பேதை நீ பிரிந்ததற்கு- என் விழிகள் பேய்மழையாய் கொடடுதடி
இதயமேற்றி எனை சுமந்து இறக்கிவிட்டு சென்றதாலோ
இவளின்றி என்னுலகம் இயங்காது என்பதாலோ
எதற்கும் அழமாட்டேனென்று வீரம் பேசிய
என் விழிகள் இன்று
கள்ளி உன் கபடத்தால் கண்ணீர்விட்டு கதறுதடி
கவலை என்னை கொல்லுதடி
No comments:
Post a Comment