Friday, 15 May 2015

இது காதல் பதியம்

அன்பெனும் செடியினை அவளாக வளைத்தெந்தன்
இதய குடுவையினில் பதியமும் போட்டுவைத்தாள்

காதல் பூ பூக்குமென்று கன்னியவள் சொன்னதினால்-தினம்
கனவினில் அவள்வர நான் உறக்கங்கள் விற்றிருத்தேன்

ஒட்டியிருக்கும் உயிரென்று உலகுமறந்து நானிருந்தேன்-ஆனால்
வெட்டினால்தான் பதியெமென்று வெட்டிப் பிரித்து எட்டிநின்றால்

வேர்விட்டால் வெட்டுவது பதியமென்று அறியாத
பாவியாக நான் இருந்தேன்
பாவை உனை நினைத்திருந்தேன்

அவள் செடியோ இன்றெல்லாம் அழகாய்தான் பூக்கிறது
ஆனால்..
காதல் வேர்விட்ட என் செடியோ?
கண்ணீராய் பூத்திடுதே
கவலையினில் வாடிடுதே....

No comments:

Post a Comment