பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
ஆமாம்
பிரிவு எனக்கு மிகவும் பிடிக்கும்
இமைகளை பிரிந்தால்தான் விழிகள் பார்க்க முடியும்
சிறகுகளை பிரிந்தால்தான் பறவை பறக்க முடியும்
செடிகளை பிரிந்தால்தான் மலர்கள் மாலையாக முடியும
மேகத்தை பிரிந்தால்தான் மழை மண்சேர முடியும்
கிளைகளை பிரிந்தால்தான் காற்றை சுவாசிக்க முடியும்
இதழ்களை பிரிந்தால்தான் மௌனத்தின் விரதம் முடியும்
ஓ...
அவள் என்னை பிரிந்ததால்தான்
இந்த கவிதையோ.?
No comments:
Post a Comment