தவம்பல புரிந்து வரம்பல பெற்றனர் முன்னோரெலாம்
நானும் புரிகிறேன் தவமொன்று
கடவுளை கேட்கிறேன் வரமொன்று
என் தவம் யாதென்று யார்தான் அறிவார்?
உன்மனம் அறியும் அதை ஊர்தான் அறியாதடி
வரம்தரும் கடவுள் யார் இங்கே?
கடவுள் இருந்தாலும் கலியுகம் வருமா? வரமும் தருமா?
உனைநான் கடவுளென்றேன் ஒளிந்துகொண்டாய் ஓடிச்சென்று
உன் நினைவுகளை சிதையாய் மூட்டி
என் நெஞ்சதனை நினைவில் வாட்டி
நெடுந்தவம் புரிகிறேன் நித்தமும்
என்தவம் கண்டு கொடுந்தவமும் குலைநடுங்குமடி
உன்மனம் ஏனடி குழையவில்லை இன்னும்
கலியுகம் வரமாட்டோம் என்ற கட்டுபாட்டை கொஞ்சம் மீறி
வரம்தரும் ஈசனே வருவாயா எனக்காக?
உன் தலை கைவைத்து
உனையே சோதிக்கும் வரம்
கேட்க நான் மாட்டேன்
வந்துவிடு ஈசனே தைரியமாக
தந்துவிடு வரமும் எனக்காக
என்னை கருவாக உருமாற்றி
அவள் மடியில் பிறக்க செய்
இல்லை அவள் கையால் என்னுயிரை
இச்ஜென்மம் இறக்க செய்
நான் கேட்கும் வரமெலாம் இதுதான்
துனையாக வேண்டாமென தூக்கியெறிந்து சென்றவள்
மழலையாக அவள்மடி பிறந்தால்
அன்பால் அரவனை கொள்வாளா.?
இல்லை
அப்போதும்
அனாதையாய் விட்டுச் செல்வாளா.?
No comments:
Post a Comment