Wednesday, 25 January 2017

சொல்லடி சகியே

காதல் உரமிட்டு
செழிப்பாய்தான் வளர்திருந்தாய்
பச்சைப் பசேலென
என் வாழ்க்கைச் சமவெளியை
இதோ
நீயற்ற பொழுதுகளில்
உன் நினைவின் பற்களுக்கு
கொஞ்சம் கொஞ்சமாய் இரையாகும்
என் உயிரின் அழுகுரல்
கொஞ்சம் சன்னமாகவாவது கேட்கிறதா உனக்கு?

Friday, 20 January 2017

வேதாள நினைவுகள்

என்ன கதை சொல்லி இறக்கி விட

என் இதய முதுகிலேறி

கூடவே வரும்

உன் வேதாள நினைவுகளை

தேடலில் கிடைக்காதவன்

கானும் பொங்கல் இன்று
காடு
கரை
கழனி
ஆறு
அருவி
மலை
கோவில்
குளம்
கண்டுதான் வந்தேன் நான்
இன்னும் என்னென்னவோ.
காதல் திருவிழாவில்
தொலைந்த என்னையும்
தொலைத்த அவளையும் தவிர...

நினைவுப் புத்தகங்கள்

வாழ்நாள் வாசகனாக்கி விட்டாய் என்னை

என் இதய அலமாரியெங்கும் நிரம்பியிருக்கும்

உன் நினைவு புத்தகங்களுக்கு...

Monday, 9 January 2017

நினைவின் கனங்கள்

யாரோ ஒருவர் கையைப் பிடித்து நடக்கும்
கோவில் திருவிழாவில்
வழி தப்பிய சிறுவனாய்
உன் நினைவுகளை பிடித்துக் கொண்டு
காதல் திருவிழாவில் தொலைந்த நான்

காதல் கோவிலின் வாசல் அது
கை நீட்டுகிறேன் உன்னிடம்
யாசிக்கும் ஏழையாய் நான்
காணிக்கையிட்டு போகிறாய்
வாரி வழங்கும் வள்ளலாய் நீ
நிறைய நிறையவே நினைவுகளை

சவம் என்னா கனம் கனக்கு
தூக்குபவர்கள் சொல்வார்கள் கண்டிப்பாக
நாளை நான் செத்தப் பிறகு
ஆமாம்
ஜென்மத்துக்கும் சேர்த்து வைத்த
உன் நினைவின் கனமும் என்னோடல்லவா

எல்லோரும் சொல்கிறார்கள்
பித்து நிலையில் இருப்பதாக என்னை
அவர்களுக்கெப்படி தெரியும்
உன்னையே நினைத்து உன்னையே உளரும் நான்
முக்தி நிலையில் இருப்பது

ஜன்னலோர பயணியாய் நான்
அதோ கை வீசி வருகிறது
உன் நினைவுகள்
கண்ணீர் வரவழைக்கும் காற்றாக
அதனாலென்ன
ஜன்னலோர பயணமே இரசிக்கதானே

ஏழு கடல் ஏழு மலை தாண்டி
ஏதோ ஒரு கிளியிடமெல்லாம் இல்லை
என்னை மறந்து விடுங்கள் என்ற
உன் ஒற்றை வார்த்தையில்தான்
கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்  கொண்டிருக்கிறது
இந்த காதல் ராஜாவின் உயிர்

Wednesday, 4 January 2017

நினைவுச் சங்கிலி

அப்படி
எங்கேதான் ஓடி விட முடியும் என்னால்
உன் நினைவுச் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு
பெண்ணே....
நீயாவாது சொல்லடி
என் கால்களில் சங்கிலியிட வேண்டாமென்று