Thursday, 14 May 2020

மழை

உன் வார்த்தைகளை கேட்பதற்கு
நானிருக்கிறேன் என்றாய்
வார்த்தைகளால் உன்
இதயம் நுழைந்து விட
சொற்கள் தேடுகிறேன்
சொல்லாமல் கொள்ளாமல்
நீ போனது தெரியாமல்

நீ கேட்கிறாய் என்று
நான் பேசிய வார்த்தைகளெல்லாம்
காற்றிலேறி மேகம் முட்டுகிறது

சூல் கொண்ட என் சொற்களோ
உடைந்த மேகமாய் பொழிகிறது
ஊருக்கும் உனக்கும்
மழை என்ற பெயரில்.

No comments:

Post a Comment