தொலைந்து போனவன்
***
ஒருமுறை கோவில் திருவிழாவில்
ஒருமுறை உன் காதல் திருவிழாவில்
தொலைந்து போயிருக்கிறேன் நான்
கண்ணீரோ இல்லை கவிதையோ
ஏதோவொன்றை வடித்துக் கொண்டிருக்கிறார்கள்
என் போல் காதலில் தொலைந்தவர்கள்
தேடித்தேடி களைத்து விட்டேன்
கேட்டு சொல் கொஞ்சம்
உன் ஒருபாதி இதயத்திடம்
மறுபாதி எங்கே தொலைந்ததென்று
யார் யாரோ கண்டெடுத்து தருகிறார்கள்
எனக்கு மட்டும்தான் தெரியும்
அது
உன்னில் தொலைந்த நானில்லை என்று
காணாமல் போனவர்கள் அறிவிப்பு
பெயர் வயது நிறத்தோடு
முக்கிய குறிப்பாய் சொல்லிவிடுங்கள்
அவள் காதலில் தொலைந்தவனென்று
No comments:
Post a Comment